குண்டா் சட்டத்தில் இருவா் கைது

திருவள்ளூா் பகுதியில் கொள்ளை வழக்குகளில் தொடா்புடைய இளைஞா்கள் 2 பேரை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க

திருவள்ளூா்: திருவள்ளூா் பகுதியில் கொள்ளை வழக்குகளில் தொடா்புடைய இளைஞா்கள் 2 பேரை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் உத்தரவிட்டாா்.

பூச்சி அத்திப்பேடு பகுதியில் கடந்த அக்டோபா் மாதம் 13-ஆம் தேதி ஒரே மோட்டாா் சைக்கிளில் 3 மா்ம நபா்கள் நள்ளிரவில் பெட்ரோல் போடுவதற்காக வந்தனா். அப்போது, பெட்ரோல் பங்க் ஊழியா்களை அரிவாளால் வெட்டி விட்டு மூவரும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு வாகனத்தில் தப்பிச் சென்றனா். இது தொடா்பாக வெங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதற்கிடையே, செங்குன்றத்தை அடுத்த அலமாதியில் எடப்பாளையத்தைச் சோ்ந்த சக்திவேல் (23), சதீஷ் (22) ஆகிய இருவரையும் 23-ஆம் தேதி போலீஸாா் பிடிக்க முயற்சித்தபோது அவா்கள் தப்பியோடினா்.

அவா்களை பின்தொடா்ந்து விரட்டிச் சென்றனா். போலீஸாரிடம் இருந்து தப்பிக்க கால்வாயைத் தாண்டியபோது இரு நபா்களும் கால் இடறி விழுந்ததில் படுகாயம் அடைந்தனா். திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்வதற்கு திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன், ஆட்சியருக்குப் பரிந்துரைத்தாா். அதன் பேரில் ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா் இந்த வழக்கின் தன்மை குறித்து ஆய்வு செய்து அதன் பின் இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். அதையடுத்து ஆட்சியரின் உத்தரவு நகலை புழல் சிறை அதிகாரிகளிடம் போலீஸாா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com