சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு

வாகன ஓட்டிகள் சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தி மாணவ, மாணவியர் நடத்திய விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.   

வாகன ஓட்டிகள் சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தி மாணவ, மாணவியர் நடத்திய விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.   
திருவள்ளூரில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணிக்கு பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் உமாசங்கர் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக திருவள்ளூர் நகர் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்லத்துரை ஆகியோர் பங்கேற்று பேரணியை தொடங்கி வைத்தனர்.   
காமராஜர் சிலை அருகே தொடங்கிய இப்பேரணி, வட்டாட்சியர் அலுவலக சாலை மற்றும் ஆட்சியர் அலுவலக சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாகச் சென்று, எம்.ஜி.ஆர். சிலை அருகே நிறைவு பெற்றது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவியர் சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றதோடு, சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தி சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகம் செய்தனர். 
இப்பேரணியில், காவல் உதவி ஆய்வாளர்கள் பார்த்திபன், ரவி, பள்ளியின் விளையாட்டுப் பயிற்றுநர் மோகன்பாபு, பள்ளி ஆசிரியர்கள் ராமராசு, புஷ்பராஜ், கோபிநாத், சின்னராசு ஆகியோர் கலந்துகொண்டு வழிநடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com