அகத்தீஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை

பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோயிலில் மழை பெய்ய வேண்டி, 500-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர்.

பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோயிலில் மழை பெய்ய வேண்டி, 500-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர்.
 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் 1,500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியில் பருவமழை பெய்ய வேண்டி, திருச்சி மாவட்டம் துறையூரில் இயங்கி வரும் அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று அகத்தீஸ்வரரையும், அகத்திய முனிவரையும் மனமுருக பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்தினர்.
 மழை பெய்து வறட்சி நீங்கி, மக்கள் வாழ்வில் வளம் பெறவும், முருகனின் ஆறுபடை வீடுகளிலும் திருவிளக்கு பூஜை நடத்தியதாகவும், இதைத் தொடர்ந்து அகத்தீஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை நடத்தியதாக அகத்திய சன்மார்க்க சங்கத்தினர் தெரிவித்தனர்.
 இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com