நிலத்தடி நீர் திருட்டு: 3 டேங்கர் லாரிகள் சிறைபிடிப்பு

செங்குன்றம் அருகே நிலத்தடி நீரை விற்பனைக்கு கொண்டு செல்வதாகக் கூறி, 3 டேங்கர் லாரிகளை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தனர்.

செங்குன்றம் அருகே நிலத்தடி நீரை விற்பனைக்கு கொண்டு செல்வதாகக் கூறி, 3 டேங்கர் லாரிகளை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தனர்.
 செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் கண்ணம்பாளையம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தனியார் சிலர் ராட்சத ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, நிலத்தடி நீரை எடுத்து, டேங்கர் லாரிகள் மூலம் சென்னையில் உள்ள உணவகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
 இதனால் கண்ணம்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது என கடந்த ஜூன் மாதம் கண்ணம்பாளையம் பொதுமக்கள் சில டேங்கர் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
 இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை கண்ணம்பாளையம் பகுதிகளில் நிலத்தடி நீரை எடுத்து வந்த 3 டேங்கர் லாரிகளை கண்ணம்பாளையம் பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
 தகவல் அறிந்து வந்த செங்குன்றம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன், உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் முறையாக புகார் கொடுத்தால் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில், பொதுமக்கள் 3 லாரிகளையும் விடுவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com