விவசாய தொழிலாளர்களுக்கான பயிற்சி முகாம்
By DIN | Published On : 09th June 2019 12:59 AM | Last Updated : 09th June 2019 12:59 AM | அ+அ அ- |

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் இரு நாள் மண்டலப் பயிற்சி முகாம் பெரியபாளையத்தில் சனிக்கிழமை தொடங்கியது.
முகாமில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முகாமுக்கு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க திருவள்ளூர் மாவட்டத் தலைவர் ஏ.ஜி.கண்ணன் தலைமை வகித்தார். இதில் "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை நமது தலையீடு' என்ற தலைப்பில் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் ஜி.மணி பேசினார். மாவட்ட துணைச் செயலாளர்
பி.அருள் வரவேற்றார். "வருவாய்த்துறை நடைமுறைகளும்-வீட்டுமனைப் பட்டாவும்' என்ற தலைப்பில் மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர் பேசினார். இந்நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பி.சண்முகம் தலைமை வகித்தார்.
"அரசு நலத் திட்டங்களும் நமது தலையீடும்' என்ற தலைப்பில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன் பேசினார். மாவட்டப் பொருளாளர் எம்.கர்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், விவசாயத் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.