375 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

திருவள்ளூரில் உள்ள கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட 375 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவள்ளூரில் உள்ள கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட 375 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சுற்றுச்சூழல் மற்றும் பசுமையாக்கும் நோக்கில், ஒரு முறையே பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, இதற்கான மாற்றுப்பொருள்களை பயன்படுத்த வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து, திருவள்ளூர் நகராட்சியில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கிடையே மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது, பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு மீண்டும் அதிகரித்தது. இதைத் தவிர்க்கும் வகையில், கடைகளில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.  
அதன்பேரில், திருவள்ளூர் நகராட்சி பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கடைகளில் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், திருவள்ளூர் நகராட்சிக்குள்பட்ட கற்குழாய் சாலை, பெரியகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளிலும் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர். அப்போது, கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தியது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, பல்வேறு கடைகளில் இருந்து மொத்தம் 375 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர்.    ரூ.18 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com