வெளிமாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் குடிநீர்: எஸ்.பி.வேலுமணி

சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம்

சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
  தாமரைப்பாக்கம் அருகே மாகரல் பகுதியில் அமைந்துள்ள நீரேற்றும் நிலையத்தில், விவசாய ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் சென்னை குடிநீருக்காக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகளை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பென்ஜமின் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியது: சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 190 நாள் மழையில்லாததால், வறட்சி ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சென்னை மாநகரில் 830 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 525 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. 
குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க வெளி மாநிலங்களில்  இருந்து ரயில்கள் மூலம் குடிநீரைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் உடன் இருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com