தொகுதிகள் தோறும் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் வாக்குப் பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரம் வைத்து மாதிரி
தொகுதிகள் தோறும் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் வாக்குப் பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரம் வைத்து மாதிரி வாக்குச் சாவடி மையம் அமைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 
  மக்களவைத் தேர்தலுக்கு வரும் ஏப். 18-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மக்களவைத் தேர்தலில் மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரையும் வாக்களிக்கச் செய்ய வேண்டும். இதற்காக வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து ஏற்கெனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 
அதேபோல், ஒரு வாக்குச் சாவடி மையம் செயல்படும் முறை குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறும் வகையில் மாதிரி வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப் பதிவு அலுவலர், வாக்குப்பதிவு நிலை அலுவலர்-1, நிலை அலுவலர்-2 மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆகியவை மாதிரி வாக்குச் சாவடி மையங்களில் இடம் பெற்றுள்ளது. 
 இதை வலியுறுத்தும் நோக்கில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதிரி வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பிட்ட வாக்குச் சாவடி மையங்களைத் தேர்வு செய்து, மாதிரி வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை பொதுமக்கள் நேரில் பார்வையிடும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com