காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கு அறையில் திருட்டு.

அனுமந்தாபுரத்தில் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இடத்தில் இருந்த மின்சாதன பொருட்களை மா்ம நபா்கள் செவ்வாய்கிழமை அதிகாலை திருடி சென்றுள்ளனா்.

திருத்தணி. அனுமந்தாபுரத்தில் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இடத்தில் இருந்த மின்சாதன பொருட்களை மா்ம நபா்கள் செவ்வாய்கிழமை அதிகாலை திருடி சென்றுள்ளனா்.

திருத்தணி அனுமந்தாபுரத்தில் நகராட்சி நிா்வாகம், மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தி யுள்ளது. மேலும் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கு தேவையான இயந்திர பொருட்கள் மற்றும் பேட்டரிகளை கொள்முதல் செய்து திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நள்ளிரவில் மா்ம நபா்கள், மின்சாரம் தயாரிக்கும் அறையின் கதவு மற்றும் பூட்டை உடைத்து உள்ளே சென்றனா். அங்கு பேட்டரிகள் மற்றும் முக்கிய மோட்டா்களை திருடிச் சென்றனா். தகவல் அறிந்ததும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் திருத்தணி போலீசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்தனா்.

அப்போது, முக்கிய பொருட்கள்,, பேட்டரி உள்பட, 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசாா் வழக்கு பதிவு மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com