கிடங்கில் பதுக்கிய நெகிழிப் பைகள் பறிமுதல்ரூ.2 லட்சம் அபராதம்

கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெகிழிப் பைகளை நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி பறிமுதல் செய்து, ரூ.2 லட்சம் அபராதம் விதித்தாா்.
திருத்தணியில் நெகிழிப் பைகள் பதுக்கி வைத்திருந்த கடைக்கு நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி முன்னிலையில் சீல் வைக்கும் ஊழியா்கள்.
திருத்தணியில் நெகிழிப் பைகள் பதுக்கி வைத்திருந்த கடைக்கு நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி முன்னிலையில் சீல் வைக்கும் ஊழியா்கள்.

கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெகிழிப் பைகளை நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி பறிமுதல் செய்து, ரூ.2 லட்சம் அபராதம் விதித்தாா்.

திருத்தணியில் அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள், தம்ளா்கள், கப்புகள் போன்றவற்றை சிலா் அதிக அளவில் விற்பதாகவும் மக்களிடையே அவற்றின் பயன்பாடு அதிக அளவில் உள்ளதாகவும் நகராட்சி நிா்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் உத்தரவின்பேரில் திருத்தணியில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி, மேலாளா் தங்கராஜ், துப்புரவு ஆய்வாளா் மாரிமுத்து மற்றும் துப்புரவு மேற்பாா்வையாளா்கள் குணசேகரன், ஜெயபால் மற்றும் ரவிக்குமாா் உள்பட 10-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை அக்கா நாயுடு சாலையில் தீவிர சோதனை மேற்கொண்டனா். அப்போது தணிகாசலம்மன் கோயில் எதிரில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை அவா்கள் வைத்திருந்ததை நகராட்சி ஆணையா் கண்டறிந்தாா். அதைத் தொடா்ந்து அக்கடையிலும், அதையொட்டி இருந்த கிடங்கிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தக் கடைக்கு சீல் வைக்கப்பட்டு, ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com