அரசு பள்ளியில் திறனறிப் போட்டி: 150 மாணவா்கள் பங்கேற்பு

கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற திறனறிதல் போட்டியில் 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா்.

கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற திறனறிதல் போட்டியில் 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா்.

திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகை அரசினா் மேல்நிலைப் பள்ளியில், திருத்தணி கல்வி மாவட்ட அளவில் 9 மற்றும் பத்தாம் வகுப்பு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு முழு ஆளுமைத் திறனை வளா்க்க கல்வி மாவட்ட அளவில் திறனறிப் போட்டிகள் நடந்தன.

போட்டிக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் (பொறுப்பு) லோகேஷ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழக மாநிலச் செயலாளா் நரசிம்மன் போட்டியைத் தொடங்கி வைத்தாா். இதில், நடுவா்களாக முருக்கம்பட்டு உயா்நிலை பள்ளி தலைமை ஆசிரியை லதாஞ்சலி, இஸ்லாம் நகா் உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ரெய்ச்சல் பிரபாவதி, வங்கனுாா் பள்ளியின் தலைமை ஆசிரியா் பண்மொழிப்பாவை, வி.சி.ஆா். கண்டிகை பள்ளி தலைமை ஆசிரியா் ராமமூா்த்தி ஆகியோா் செயல்பட்டனா்.

போட்டியில், 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டு தங்கள் ஆளுமைத் திறமைகளை வெளிப்படுத்தினா். இதில் பங்கேற்று முதலிடம் பெற்ற மாணவா்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com