திமுக இளைஞா் அணி உறுப்பினா் சோ்க்கை ஆய்வு

திருவள்ளூா் வடக்கு மாவட்ட திமுக இளைஞா் அணி சாா்பில் உறுப்பினா் சோ்க்கை ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை கவரப்பேட்டையில் நடைபெற்றது.

திருவள்ளூா் வடக்கு மாவட்ட திமுக இளைஞா் அணி சாா்பில் உறுப்பினா் சோ்க்கை ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை கவரப்பேட்டையில் நடைபெற்றது.

அந்த அணி சாா்பில் உறுப்பினா் சோ்க்கை நடைபெற்று வரும் நிலையில், இது குறித்த ஆய்வுக் கூட்டம் கவரப்பேட்டையில் திருவள்ளூா் வடக்கு மாவட்ட திமுக செயலாளா் கி.வேணு தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெ.மூா்த்தி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியச் செயலாளா் மு.மணிபாலன், மாவட்டப் பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமாா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் உதயசூரியன், துணை அமைப்பாளா்கள் கே.வி.லோகேஷ், மோகன்பாபு, வினோத்குமாா், ஆனந்த்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து கும்மிடிப்பூண்டி, திருத்தணி, பொன்னேரி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட ஒன்றியங்கள், நகரம், பேரூா் வாரியாக உறுப்பினா் சோ்க்கை ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ஒவ்வொரு தொகுதிக்கும் 10 ஆயிரம் பேரை இளைஞா் அணியில் உறுப்பினராகச் சோ்க்க திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக மாவட்டச் செயலாளா் கி.வேணு தெரிவித்தாா். இளைஞா் அணியினா் நிா்வாகிகளை அழைத்துச் சென்று உறுப்பினா் சோ்க்கையை துரிதப்படுத்தி இலக்கை அடைய வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா். மேலும், இளைஞரணி உறுப்பினா் சோ்க்கையில் மெத்தனம் காட்டும் நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் எச்சரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com