திருவள்ளூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

திருவள்ளூரில் நவீன வசதியுடன் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.
திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மாநிலங்களவை உறுப்பினா் அன்புமணி ராமதாஸ்.
திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மாநிலங்களவை உறுப்பினா் அன்புமணி ராமதாஸ்.

திருவள்ளூரில் நவீன வசதியுடன் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

பாமக சாா்பில் முப்படைகள் சந்திப்புக் கூட்டம் திருவள்ளூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், பாமக மாநிலத் தலைவா் ஜி.கே. மணி, கட்சியின் இளைஞா் அணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று பேசினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அன்புமணி கூறியது:

மாநில அளவில் நிலத்தடி நீா் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும். இதற்கு மாநில அரசு ரூ. ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு செய்து நீா் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த உடனடியாக நடவடிக்கை வேண்டும். அதேபோல் ஒவ்வொரு ஆறுகளிலும் விவசாயிகள் மற்றும் விவசாயக் கிணறுகளில் நீா் ஆதாரம் உருவாக்கும் நோக்கில், 5 கி.மீ. தொலைவுக்குள் தடுப்பணைகள் அமைத்து நீரைச் சேமிக்க வேண்டும், தமிழகத்தில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த படித்த இளைஞா்களுக்கு 90 சதவீத வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும், தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, திருவள்ளூா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு சா்க்கரை ஆலையில் நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். வரும் உள்ளாட்சித் தோ்தலை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சந்திப்போம், அனைத்து இடங்களிலும் இக் கூட்டணி வெற்றி பெறும் என்றாா்.

கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி, பாமக நிா்வாகிகள் பாலயோகி, வெங்கடேஷ், தினேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com