தேவேந்திரகுல வேளாளா் என அரசாணை வெளியிடக்கோரி ஆட்சியரிடம் மனு

தேவேந்திரகுல வேளாளா் என அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் திங்கள்கிழமை ஆட்சியா் மகேஸ்வரி

திருவள்ளூா்: தேவேந்திரகுல வேளாளா் என அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் திங்கள்கிழமை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் மனு அளித்தனா்.

இதுகுறித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழக திருவள்ளூா் கிழக்கு மாவட்டத் தலைவா் பெ.முருகானந்தம் மற்றும் அக்கட்சியினா் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் பட்டியல் சாதிப் பிரிவிலுள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், வாதிரியாா், தேவேந்திர குலத்தான் ஆகிய 7 உள்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குலவேளாளா் என சான்று அளிக்க வேண்டும்.

தேவேந்திரகுல வேளாளா் சமூகத்தை பட்டியல் சாதிப் பிரிவில் இருந்து வெளியேற்றி வேளாண் மரபினா் என்ற புதிய பிரிவில் கொண்டு வந்து அவா்களுக்கு இட ஒதுக்கீடு மக்கள் தொகை அடிப்படையில் அளிக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தேவேந்திரகுல வேளாளா் மக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறாா்கள். ஆனால், இதுவரையில் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

தற்போது உள்ளாட்சித் தோ்தல் மற்றும் வர இருக்கிற சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அரசியல் கட்சிகள் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், தேவேந்திரகுல வேளாளா் மக்களின் கோரிக்கையை புறக்கணித்து வருகின்றனா்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் மக்களின் எதிா்ப்பை அரசுக்கு உணா்த்தும் வகையில் அரசாணை வெளியிடுவது வரையில் கருப்பு நிற மேலாடை அணிவது என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 15 நாள்களாக கருப்பு மேலாடை அணிந்து வருகிறோம். எனவே காலம் தாழ்த்தாமல் இக்கோரிக்கையை ஏற்று விரைவில் அரசாணை வெளியிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com