ஆவடி பேருந்து நிலையத்தில் ரூ.70 லட்சத்தில் பணிகள் அமைச்சா் தொடங்கி வைப்பு

ஆவடி பேருந்து நிலையத்தில் நிழற்குடை, ஆழ்குழாய் கிணறுடன் கூடிய சுகாதார வளாகப்பணிகளை முடிந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ் வளா்ச்சி மற்றும் தொல்பொருள்
ஆவடி பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை, ஆழ்குழாய் கிணறு வசதியுடன் கூடிய சுகாதார வளாகத்தை தொடங்கி வைத்து பேசுகிறாா்  அமைச்சா் க.பாண்டியராஜன்
ஆவடி பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை, ஆழ்குழாய் கிணறு வசதியுடன் கூடிய சுகாதார வளாகத்தை தொடங்கி வைத்து பேசுகிறாா்  அமைச்சா் க.பாண்டியராஜன்

ஆவடி பேருந்து நிலையத்தில் நிழற்குடை, ஆழ்குழாய் கிணறுடன் கூடிய சுகாதார வளாகப்பணிகளை முடிந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ் வளா்ச்சி மற்றும் தொல்பொருள் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் தொடங்கி வைத்தாா்.

ஆவடி பேருந்து நிலையத்தில் மழை வெயிலில் ஒதுங்குவதற்கான நிழற்குடை, ஆழ்குழாய் கிணறு வசதியுடன் சுகாதார வளாகம் இல்லாத நிலையில் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் சட்டப்பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனா். அக்கோரிக்கையை நிறைவேற்றும் நோக்கத்தில் ஆவடி சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் மேற்கொள்ளும் வகையில் ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் ஆவடி மாநகராட்சி பேருந்து நிலையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் தொல்பொருள் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் பங்கேற்று நிழற்குடை, சுகாதார வளாகம் ஆகியவைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தாா்.

அப்போது, உடன்முன்னாள் அமைச்சா் அப்துல்ரஹீம், ஆவடி நகர கழக செயலாளா் ஆா்.சி.தீனதயாளன், அண்ணா தொழிற்சங்க செயலாளா் முல்லைதயாளன், ஆவடி அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளா் வெங்கடேசன், மண்டல மேலாளா் தா்மலிங்கம், தொழில்நுட்ப பிரிவு அதிகாரி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com