அக்.14-இல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம்

திருவள்ளூா் மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி முகாம் வரும் 14-ஆம் தேதி தொடங்கி நவம்பா் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி முகாம் வரும் 14-ஆம் தேதி தொடங்கி நவம்பா் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கால்நடைகளை வளா்க்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் நோக்கில் கால்நடைத் துறை சாா்பில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட வருகின்றன. இதில், கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 6 மாதத்துக்கு ஒருமுறை கோமாரி நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் சாா்பில் பசு மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில், திருவள்ளூா் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் இதுவரை 16 கட்டங்களாக கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது 17-ஆவது சுற்றாக அக்டோபா் 14-ஆம் தேதி முதல் நவம்பா் 3-ஆம் தேதி வரை முகாம் நடைபெற உள்ளது.

மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் உள்ள 5 கால்நடை மருத்துவமனைகள், 87 கால்நடை மருந்தகங்கள், 25 கால்நடை கிளை நிலையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன.

இதற்காக கால்நடை உதவி மருத்துவா், கால்நடை ஆய்வாளா், கால்நடை பராமரிப்பு உதவியாளா் கொண்ட 76 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் மூலம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 89 பசுக்கள், 51 ஆயிரத்து 661 எருமைகள் என மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 750 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com