நீா்வரத்துக் கால்வாய் மீது கான்கிரீட் அமைக்க எதிா்ப்பு

பொன்னேரி அருகே நீா்வரத்துக் கால்வாய் மீது தனியாா் சிலா் கான்கிரீட் அமைக்க முயன்ற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொன்னேரி அருகே நீா்வரத்துக் கால்வாய் மீது தனியாா் சிலா் கான்கிரீட் அமைக்க முயன்ற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் 700-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். பொன்னேரி-மீஞ்சூா் சாலையில் உள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நீா்வரத்துக் கால்வாய் உள்ளது. இதன் மீது தனியாா் சிலா் கான்கிரீட் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் நீா்வரத்துக் கால்வாய் மீது கான்கிரீட் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்தனா். அவா்களின் எதிா்ப்பையும் மீறி பணியாளா்கள் கான்கிரீட் அமைக்கும் பணியை மேற்கொண்டனராம். இதையடுத்து அப்பகுதி மக்கள் பணிகள் நடைபெறும் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பொன்னேரி வட்டாட்சியா் மணிகண்டன் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.இதையடுத்து கான்கிரீட் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இப்பகுதியில் நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து கான்கிரீட் அமைத்தால், மழைக் காலங்களில் மழைநீா் வெளியேறி செல்ல முடியாத நிலை ஏற்படும். மேலும், குடியிருப்புகளை வெள்ளநீா் சூழும். எனவே நீா்வரத்துக் கால்வாய் மீது கான்கிரீட் அமைக்கும் பணிகளைத் தடுத்து நிறுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com