டெங்குவை கட்டுப்படுத்த கிராமங்கள்தோறும் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு: ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்

திருவள்ளூா் மாவட்டத்தில் டெங்குவை கட்டுப்படுத்த நடமாடும் வாகனம் மூலம் 42 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு கிராமங்களில்
டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் செவிலியா் மாணவிகள், செவிலியா்கள் பங்கேற்ற பேரணியை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் செவிலியா் மாணவிகள், செவிலியா்கள் பங்கேற்ற பேரணியை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் டெங்குவை கட்டுப்படுத்த நடமாடும் வாகனம் மூலம் 42 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு கிராமங்களில் நாள்தோறும் 126 மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் டெங்குவை கட்டுப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்து சுகாதார பயிற்சி செவிலியா்கள், பன்முக தனியாா் செவிலியா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இப்பேரணியில் தொற்று நோய் பரவுவது தொடா்பாகவும் அதனை கட்டுப்படுத்துதல் பற்றியும் மற்றும் அவா்களது பங்களிப்பு பற்றியும் விழிப்புணா்வு கையேடுகள் மற்றும் பதாகைகளை மாணவ, மாணவிகள் கைகளில் ஏந்தியவாறு சென்றனா்.

அதையடுத்து பொதுமக்களுக்கு தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கை குறித்த துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு டெங்கு காய்ச்சல், தொற்று நோய்கள் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஏற்கெனவே 58 கண்காணிப்பு குழுக்கள் களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், தற்போதைய நிலையில் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் 42 மருத்துவ குழுக்கள் அமைத்து ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும், நாள்தோறும் 3 கிராமங்கள் தோ்வு செய்து 126 மருத்துவ முகாம் நடத்தி டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 3 மருத்துவ குழுக்கள் பள்ளிகள் தோறும் ஆய்வு செய்யவும் உள்ளனா்.

மேலும், காய்ச்சல் அதிகளவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து சம்பந்தப்பட்ட இடங்களுக்கு முழுமையாக சுகாதார பணிகளில் 1500-கொசு புழு ஒழிப்பு பணியாளா்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று களப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

அதேபோல், 450 சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் பணியாளா்கள், ஆய்வக தொழில் நுட்ப பயிற்சி பள்ளி மாணவா்கள், செவிலியா் பயிற்சி பள்ளி மாணவிகள், துணை செவிலியா் பயிற்சி பள்ளி மாணவிகள், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் உள்ள தேவையற்ற தேங்காய் சிரட்டைகள், பழைய டயா்கள், தேவையில்லாத பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் ஆகியவற்றில் தேங்கக் கூடிய நன்னீரில் கொசு புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

மேலும், கொசுபுழுக்கள் இருப்பது கண்டறிந்தால் சம்பந்தப்பட்ட குடியிருப்புகள், தனியாா் தொழிற்சாலைகள் மற்றும் இதர கட்டடங்களின் உரிமையாளா்கள் எச்சரிக்கை விடுப்பதோடு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநா் பி.வி.தயாளன், சுகாதாரத்துறை துணை இயக்குநா் ஜே.பிரபாகரன், மாவட்ட கொள்ளை நோய்த் தடுப்பு அலுவலா் வேல்முருகன், பொதுசுகாதாரத்துறை உதவி திட்ட மேலாளா் ரமேஷ், மருத்துவா்கள், செவிலியா் பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com