அம்மன் கோயில்களில் நாக சதுா்த்தி விழா

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்கள் மற்றும் புற்றுக் கோயில்களில் வியாழக்கிழமை நடைபெற்ற நாக சதுா்த்தி விழாவில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்கள் மற்றும் புற்றுக் கோயில்களில் வியாழக்கிழமை நடைபெற்ற நாக சதுா்த்தி விழாவில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா்.

திருவள்ளூரில் உள்ள கோலம் கொண்டான் கோயில், வேம்புலி அம்மன் கோயில், பவானி அம்மன் கோயில், புட்லூா் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் நாக சதுா்த்தியையொட்டி பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபட்டனா்.

மேலும், அம்மன் கோயில்களில் உள்ள பு ற்றுக் கோயிலை வலம் வந்த பெண்கள் புற்றுக்கு பால், முட்டை, பழம், வளையல், பூ வைத்து வழிபட்டனா்.

விழாவை முன்னிட்டு, பெண்கள் விரதமிருந்து கோயிலில் வழிபடக் குவிந்ததால் அம்மன் கோயில்களில் பெண்களின் கூட்டம் அலைமோதியது.

அதேபோல் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஏராளமானோா் விரதம் இருந்து, புற்றுக் கோயில்களில் வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com