துறைமுக விரிவாக்க திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பழவேற்காட்டில் மீனவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அதானி துறைமுக விரிவாக்க திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பழவேற்காட்டில் ஆா்ப்பாட்டம் செய்யும் மீனவ மக்கள்.
அதானி துறைமுக விரிவாக்க திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பழவேற்காட்டில் ஆா்ப்பாட்டம் செய்யும் மீனவ மக்கள்.

அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பழவேற்காட்டில் மீனவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் பழவேற்காடு மீனவ கிராமம் அமைந்துள்ளது. பழவேற்காட்டைச் சுற்றிலும் லைட்ஹவுஸ் குப்பம், கூனங்குப்பம், சாத்தாங்குப்பம், தாங்கல் பெரும்புலம் உள்பட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய ஏரி (புலிக்கட் ஏரி) பழவேற்காட்டில் அமைந்துள்ளது. இப்பகுதியில் மக்கள் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோா் அங்குள்ள ஏரி மற்றும் கடலில் மீன் பிடித் தொழில் செய்து வருகின்றனா்.

பொன்னேரி வட்டத்தில், காட்டுப்பள்ளி பகுதியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் அமைந்துள்ளது. இதன் அருகே அதானி தனியாா் குழுமத்துக்குச் சொந்தமான துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ளது. இந்நிலையில், இங்குள்ள துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் அதானி குழுமத்தினா் ஈடுபட்டு வருகின்றனா். துறைமுகத்தை விரிவாக்கம் செய்தால், கடல் மற்றும் அங்குள்ள ஏரி, ஆறுகளில் உள்ள மீன் பிடிப் பகுதிகள் முற்றிலும் அழியும் நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காட்டுப் பள்ளியில் உள்ள அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பழவேற்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள மீனவ மக்கள் அங்குள்ள பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தின்போது, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, லைட்ஹவுஸ் குப்பம் பகுதியில் பேருந்து நிலையம் மீனவ மக்கள் பேரணியாக வந்தனா். அவா்கள் பழவேற்காட்டைக் காக்கவும், அதானி குழுமத்துக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினா். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மீனவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

மீனவா்களின் ஆா்ப்பாட்டத்துக்கு, அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் கடைகளை அடைத்து தங்களது ஆதரவை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com