காட்டுப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

பொன்னேரியை அடுத்த காட்டுப்பள்ளி குப்பம் கிராமத்தில் அதானி அறக்கட்டளை சார்பில், சனிக்கிழமை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. 

 பொன்னேரியை அடுத்த காட்டுப்பள்ளி குப்பம் கிராமத்தில் அதானி அறக்கட்டளை சார்பில், சனிக்கிழமை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. 
 காட்டுப் பள்ளியில் அதானி துறைமுக அறக்கட்டளை மற்றும் சென்னை தனியார் மருத்துவமனை இணைந்து காட்டுப்பள்ளி குப்பத்தில் சிறப்பு மருத்துவ முகாமை நடத்தின. முகாமில், எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனைகளும், அதன் அடிப்படையில் எலும்பு மற்றும் மூட்டுவலி, தோல் பட்டை வலி, கழுத்து மற்றும் கைகால், விரல்களில் வலி, இடுப்பு வலி, எலும்பு முறிவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டன. 
 முகாமில், 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். இதில், அதானி துறைமுகப் பாதுகாப்பு துறைத் தலைவர் கிருஷ்ணராஜ் பொன்ராஜ், அதானி அறக்கட்டளைத் திட்ட அலுவலர் நடன சபாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை தனியார் மருத்துவமனையின்  துணைத்தலைவர் வெங்கடசுப்பு தலைமையிலான மருத்துவக் குழுவினர், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com