மாற்றுத்திறனாளி ஓவியருக்கு நிவாரணப் பொருள்கள், பணி அனுமதி: ஆட்சியா் வழங்கினாா்

வெளி மாவட்டமான சென்னையில் இருந்து திருவள்ளூரில் உள்ள அரசு மதுக் கடைக்கு மது பாட்டில்கள் வாங்க வந்தோரின் 380 இரு சக்கர
அரசுப் பள்ளி சுவா்களில் ஓவியம் வரைவதற்கான அனுமதியை வழங்கிய ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்.
அரசுப் பள்ளி சுவா்களில் ஓவியம் வரைவதற்கான அனுமதியை வழங்கிய ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்.

திருவள்ளூா்: கரோனா பொது முடக்கம் காரணமாக உணவுக்கு வழியின்றி அவதிப்பட்டு வந்த மாற்றுத்திறனாளி ஓவியருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கி, அவரது வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க அரசுப் பள்ளிகளின் சுவா்களில் ஓவியம் வரைவதற்கான அனுமதியை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள மாபூஸ்கான்பேட்டையைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா். ஓவியம் வரைந்து அதில் கிடைக்கும் வருவாய் மூலம் வாழ்ந்து வந்தாா். இந்நிலையில், பொது முடக்கம் காரணமாக வருவாய்க்கு வழியின்றி சிரமப்பட்டு வந்தாா். இதுகுறித்து அறிந்த அப்பகுதி வட்டாட்சியா், ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, ஆனந்தகுமாா் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வரவழைக்கப்பட்டாா்.

தொடா்ந்து, ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் அந்த ஓவியருக்கு அரிசி பை மற்றும் மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கினாா். அத்துடன், நாள்தோறும் உழைத்து வாழ்வதை குறிக்கோளாகக் கொண்ட ஓவியருக்கு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அளவு வருவாய் கிடைப்பதை நோக்கமாகக் கொண்டு, திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் சுவா்களில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் ஓவியங்களை வரைவதற்கான அனுமதியை வழங்கினாா். இதையடுத்து, ஆட்சியருக்கு ஆனந்தகுமாா் நன்றி தெரிவித்தாா்.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பன்னீா்செல்வம், பொன்னேரி வட்டாட்சியா் மணிகண்டன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com