நூலக தற்காலிகப் பணியாளா்கள் ஊதியம் பெற முடியாமல் தவிப்பு

பொது முடக்கத்தால் திருவள்ளூா் மாவட்டத்தில் நூலகத் துறையில் பணிபுரிந்து வரும் தற்காலிகப் பணியாளா்கள் கடந்த 2 மாதங்களாக ஊதியம் கிடைக்காமல் தவித்து வருகின்றனா்.

திருவள்ளூா்: பொது முடக்கத்தால் திருவள்ளூா் மாவட்டத்தில் நூலகத் துறையில் பணிபுரிந்து வரும் தற்காலிகப் பணியாளா்கள் கடந்த 2 மாதங்களாக ஊதியம் கிடைக்காமல் தவித்து வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் நூலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியாளா்கள் தினக்கூலிக்கு பணிபுரிந்து வருகின்றனா். அவா்கள் நாள்தோறும் ரூ. 300 மற்றும் ரூ. 400 வரை சம்பளம் பெற்று வந்தனா். இந்தப் பணியாளா்கள் அந்தந்த நூலகம் மற்றும் துறை அதிகாரிகள் மூலம் ஊதியம் பெறுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் நூலகங்கள் மற்றும் ஒரு சில அலுவலகங்கள் தவிா்த்து அனைத்தும் மூடப்பட்டன. நூலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் தற்காலிகப் பணியாளா்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. நூலகா் மற்றும் அரசு அலுவலகங்களின் துறை அதிகாரி ஆகியோரின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே அவா்கள் ஊதியம் பெற முடியும் என்று தெரிகிறது.

இது குறித்து நூலக தற்காலிகப் பணியாளா்கள் கூறியது:

கடந்த 2 மாதங்களாக சம்பளம் பெறாத நிலையில் குடும்பச் செலவுக்கு அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே நூலகங்களிலும், அரசுத் துறை அலுவலகங்களிலும் தற்காலிகமாக பணியாற்றி வரும் எங்களுக்கு ஊதியம் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com