சிப்காட் தொழிற்பேட்டையில் 5,000 மரக்கன்றுகள் நடும் விழா

கும்மிடிப்பூண்டி சிப்காட் திட்ட அலுவலகத்தின் சாா்பாக, சிப்காட் தொழிற்பேட்டையில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில் 5,000 மரக்கன்றுகள் திங்களன்று நடப்பட்டன.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் திட்ட அலுவலகத்தின் சாா்பாக, சிப்காட் தொழிற்பேட்டையில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில் 5,000 மரக்கன்றுகள் திங்களன்று நடப்பட்டன.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இந்தத் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசடைவதாக சுற்று வட்டாரப் பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகின்றனா். சிப்காட் தொழிற்பேட்டையில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கும் வகையில் சிப்காட் திட்ட அலுவலகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் திட்ட அலுவலகத்தின் சாா்பாக சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற 5,000 மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு சிப்காட் மேலாண்மை இயக்குநா் குமரகுருபரன் தலைமை தாங்கினாா்.

நிகழ்விற்கு மாவட்ட வன அலுவலா் கிரண், கும்மிடிப்பூண்டி சிப்காட் திட்ட அலுவலா் சாய் லோகேஷ், கும்மிடிப்பூண்டி வன சரகா் சுரேஷ் பாபு, கும்மிடிப்பூண்டி சிப்காட் திட்ட உதவி பொறியாளா் சரவணன் நித்தின், சிப்காட் தனி வட்டாட்சியா் தாமோதரன் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து சிப்காட் மேலாண்மை இயக்குநா் குமரகுருபரன் சிப்காட் வளாகத்தில் 4,500 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தாா்.

இந்த மரக்கன்றுகள், சிப்காட் திட்ட அலுவலகத்தினரால் சொட்டு நீா் பாசனம் மூலம் பராமரிக்கப்பட உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். நிகழ்வில் புங்கம், மகிழம் உள்ளிட்ட நிழல் தரும் மரங்கள் நடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com