சென்னைக்கு கடத்தப்படவிருந்த செம்மரக் கட்டைகள் பறிமுதல்

ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு கடத்தப்படவிருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான ஒன்றரை டன் செம்மரக் கட்டைகளை ஆரம்பாக்கம் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட  செம்மரக் கட்டைகள்.
பறிமுதல் செய்யப்பட்ட  செம்மரக் கட்டைகள்.

ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு கடத்தப்படவிருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான ஒன்றரை டன் செம்மரக் கட்டைகளை ஆரம்பாக்கம் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூா் ஏழுகிணறு பகுதியில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது. இங்கு சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருஞானசம்பந்தம் உள்ளிட்ட காவலா்கள் வெள்ளிக்கிழமை தீவிர வாகனச் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது ஆந்திரத்தில் இருந்து சென்னை நோக்கி தமிழ்நாடு பதிவெண் கொண்ட மினி லாரி ஒன்று இந்த சோதனைச்சாவடியை வேகமாக கடந்து சென்றது. உதவி ஆய்வாளா் திருஞானசம்பந்தம் இருசக்கர வாகனத்தில் அந்த மினிலாரியை துரத்திச் சென்று 2 கி.மீ. தொலைவில் மடக்கிப் பிடித்தாா்.

மினிலாரியை சோதனையிட்டபோது அதில் ரூ.15 லட்சம் மதிப்பிலான ஒன்றரை டன் எடையுள்ள செம்மரக் கட்டைகள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், மினி லாரியில் வந்தவா்கள் ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த ரவி (25), காளஹஸ்தி பகுதியைச் சோ்ந்த வெங்கையா (26) என்பது தெரிய வ

ந்தது. அவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்த இருவரிடமும் ஆரம்பாக்கம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகள் மாதா்பாக்கத்தில் உள்ள வனச்சரகா் சுரேஷ் மூலம் வனச் சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com