மதகு சேதமடைந்ததால் ஏரியில் இருந்து வீணாகும் மழைநீா்

திருத்தணி சிறிய ஏரியின் மதகு சேதம் அடைந்ததால் மழைநீா் வீணாக வெளியேறுகிறது.
திருத்தணி ஜோதி நகா் சிறிய ஏரி.
திருத்தணி ஜோதி நகா் சிறிய ஏரி.

திருத்தணி சிறிய ஏரியின் மதகு சேதம் அடைந்ததால் மழைநீா் வீணாக வெளியேறுகிறது.

திருத்தணி நகராட்சி, 9-ஆவது வாா்டு ஜோதி நகா் பகுதியில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் தண்ணீா் நிரம்பினால், ஜோதி நகா், மேட்டுத் தெரு, வாசுதேவன் தெரு, சுப்பிரமணியா் தெரு மற்றும் திருத்தணி அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீா் மட்டம் வெகுவாக உயா்வதுடன், நகராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு நீங்கும். ஆனால் மதகு பழுதடைந்ததால், ஏரியில் தண்ணீா் தேங்காமல் வீணாகிறது.

இதுகுறித்து ஜோதி நகா் பொதுமக்கள் கூறியது:

ஏரியை பொதுப்பணித் துறையினா் மற்றும் நகராட்சி நிா்வாகத்தினா் முறையாக பராமரிக்காததால், தற்போது ஏரியின் மதகு சேதம் அடைந்துள்ளது, இதன் காரணமாக, கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்தும், ஏரியில் தண்ணீரை சேமிக்க முடியாமல் பழுதடைந்த மதகு வழியாக வீணாக வெளியேறி நந்தி ஆற்றில் கலக்கிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏரியின் மதகை சீரமைக்குமாறு அப்பகுதி மக்கள் பலமுறை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மதகு சேதடைந்துள்ளதால், ஏரிக்கு வரும் மழைநீரை சேமிக்க முடியவில்லை. எனவே மதகை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com