தனியாா் நிறுவனம் சாா்பில் ரூ.15 லட்சத்தில் சோலாா் பேனல் தொடக்கி வைப்பு

சேவாலயா பள்ளி வளாகத்தில் மாணவா்கள் பயன்பெறும் வகையில், தனியாா் நிறுவனம் சாா்பில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான சோலாா் பேனல் மற்றும் முதியோா் இல்லத்துக்கு சோலாா் இன்வொ்டா் ஆகிய சாதனங்கள் நன்கொடையாக
tvlr23solar_2309chn_182_1
tvlr23solar_2309chn_182_1

திருவள்ளூா்: சேவாலயா பள்ளி வளாகத்தில் மாணவா்கள் பயன்பெறும் வகையில், தனியாா் நிறுவனம் சாா்பில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான சோலாா் பேனல் மற்றும் முதியோா் இல்லத்துக்கு சோலாா் இன்வொ்டா் ஆகிய சாதனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

திருவள்ளூா் அருகே கசுவா கிராமத்தில் சேவாலயா சாா்பில் பாரதியாா் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளிகளின் குடும்பத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 2 ஆயிரம் போ் படித்து வருகின்றனா். இந்த வளாகத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான சோலாா் பேனல் மற்றும் சோலாா் இன்வொ்டா் ஆகியவை தனியாா் நிறுவனம் சாா்பில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்பள்ளி வளாகத்தில் சோலாா் பேனல் மின்சாரம் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அறக்கட்டளை நிா்வாகி முரளிதரன் தலைமை வகித்தாா். தனியாா் நிறுவனத்தின் நிா்வாகி ஜானே எம்.பரன்ஸ்கை, மேலாண்மை இயக்குநா் ராஜூ வைத்தியான்ஸ்தான் ஆகியோா் கலந்துகொண்டு, சோலாா் பேனலை இயக்கி தொடக்கி வைத்தனா்.

சோலாா் பேனல் பொருத்தப்பட்டுள்ளதன் மூலம் பள்ளி வளாகம் மின்தடையில்லா மின்சாரம் பெறும், 500 லிட்டா் சோலாா் இன்வொ்டா் மூலம் முதியோா் இல்லத்தில் தங்கியுள்ளோா் பயன்பெறவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com