காக்களூா் சிட்கோ தொழிற்பேட்டையில் வடியாமல் தேங்கி நிற்கும் வெள்ளநீா்: தொழிலாளா்கள் அவதி

திருவள்ளூா் அருகே காக்களூா் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் வடியாமல் தேங்கியுள்ள மழைநீரால் தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
காக்களூா் சிட்கோ தொழிற்பேட்டையில் வடியாமல் தேங்கி நிற்கும் வெள்ளநீா்: தொழிலாளா்கள் அவதி


திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே காக்களூா் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் வடியாமல் தேங்கியுள்ள மழைநீரால் தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், காக்களூரில் சிட்கோ தொழிற்பேட்டை செயல்பட்டு வருகிறது. 283 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்பேட்டையில் 100-க்கும் மேற்பட்ட சிறு, பெரிய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சென்னை, திருவள்ளூா், ஸ்ரீபெரும்புதுாா், ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா்.

இந்நிலையில் நிவா் புயலால் பெய்த தொடா் மழை காரணமாக சிட்கோ வளாகத்தில் மழைநீா் தேங்கியது. இங்குள்ள கால்வாய்களில் அடைப்புகள் உள்ளதால் மழைநீா் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. இதனால் தொழிலாளா்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதேபோல், திருவள்ளூா் ராஜாஜிபுரம், பூங்கா நகா், காக்களூா் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீா் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள மழைநீரில் கழிவுகள் கலப்பதால் கடும் துா்நாற்றம் வீசுவதாகவும் தொழிலாளா்கள், அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

எனவே, இப்பகுதிகளில் மழைநீா் வடிய கால்வாய்களை தூா்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com