எளாவூரில் நெல் சாகுபடி குறித்து பண்ணைப் பள்ளி பயிற்சி

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத நெல் சாகுபடி குறித்து பண்ணைப் பள்ளி பயிற்சி வேளாண் துறை சார்பில் எளாவூரில் நடைபெற்றது.
வேளாண் துறை சார்பில் நடந்த நெல் சாகுபடி குறித்து பண்ணைப் பள்ளி பயிற்சி.
வேளாண் துறை சார்பில் நடந்த நெல் சாகுபடி குறித்து பண்ணைப் பள்ளி பயிற்சி.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத நெல் சாகுபடி குறித்து பண்ணைப் பள்ளி பயிற்சி வேளாண் துறை சார்பில் எளாவூரில் நடைபெற்றது.

எளாவூரில் விவசாயிகளுக்கான நடைபெற்ற சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத நெல் சாகுபடி குறித்து நடைபெற்ற இந்த பயிற்சியில் கும்மிடிப்பூண்டி வட்டார வேளாண் உதவி இயக்குனர் கு.அறிவழகன் தலைமை தாங்கி வரவேற்றார். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திரூர் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை பேராசிரியர் விஜயசாந்தி, பயிர் மரபியல் துறை பேராசிரியர் யோக மீனாட்சி ஆகியோர் பங்கேற்று பாதிப்பில்லாத நெல் சாகுபடி குறித்து பயிற்சி அளித்தனர்.

இதில் பூச்சி நோய்க்கு எதிர்ப்பு சக்தியை தாங்கும் நெல் ரகங்களை பயிரிட வேண்டும், திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் பயிரிட வேண்டும், பட்டம் விட்டு நெல் பயிரிட வேண்டும், வயலில் நெல் தேங்கியிருந்தால் அதனை அகற்ற வேண்டும், பயிருக்கு தேவையான உரங்களை தேவையான நேரத்தில் இட வேண்டும், வேளாண்மை துறையின் பரிந்துரையின் படி பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால் சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லாத நெல் சாகுபடி செய்யலாம் என அறிவுறுத்தினார்.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை வட்டார வேளாண் தொழில்நுட்ப அலுவலர் திருமால், உதவி வேளாண் அலுவலர் அருள்முருகன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com