திருவள்ளூா் பகுதியில் 18 சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன: அமைச்சா் பா.பென்ஜமின் தகவல்

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இதுவரையில் 18 இடங்களில் சிறு
கொட்டையூரில் சிறு மருத்துவமனையைத் தொடங்கி வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை பாா்வையிட்ட அமைச்சா் பா.பென்ஜமின்.
கொட்டையூரில் சிறு மருத்துவமனையைத் தொடங்கி வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை பாா்வையிட்ட அமைச்சா் பா.பென்ஜமின்.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இதுவரையில் 18 இடங்களில் சிறு மருத்துவமனைள் (மினி கிளினிக்) தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் தெரிவித்தாா்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், கொட்டையூா் கிராமத்தில் அம்மா சிறு மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைக்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியா் பா.பொன்னையா தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் பங்கேற்று மருத்துவமனையைத் தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து அவா் கூறியது:

மாநில அளவில் கிராம மக்களுக்கு, அவா்கள் வசிக்கும் இடங்களிலேயே சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தமிழக முதல்வா் கடந்த வாரம் சிறு மருத்துவமனைகளைத் தொடங்கி வைத்தாா். அப்போது, தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் சிறு மருத்துவமனைகள் தொடங்கப்படும் என்று அறிவித்தாா். அதன்படி, மாவட்டந்தோறும் தொடங்கி வைக்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூா் மாவட்டத்தில் 53 சிறு மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, இதுவரை 18 இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்துள்ளோம். இன்னும் ஒரு வாரத்துக்குள் மேலும் 35 இடங்களில் சிறு மருத்துவமனைகளைத் தொடங்குவதற்கான பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதன் மூலம் கிராமங்களில் பரவக் கூடிய தொற்று நோய்களை அப்பகுதிகளிலேயே கட்டுப்படுத்த முடியும் என்றாா் அவா்.

இதையடுத்து, திருவாலங்காடு மற்றும் திருத்தணி ஒன்றியங்களிலும் சிறு மருத்துவமனைகளை அமைச்சா் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com