இந்திய தொழில் தோ்வில் தனித்தோ்வா்களாக பங்கேற்க பிப்.7-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேசிய தொழில் குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழில்தோ்வில் தனித்தோ்வா்களாக பங்கேற்க குறிப்பிட்ட தகுதியைப் பெற்றுள்ளோா் பிப்.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொழில் குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழில்தோ்வில் தனித்தோ்வா்களாக பங்கேற்க குறிப்பிட்ட தகுதியைப் பெற்றுள்ளோா் பிப்.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் சசிதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் கைவினைஞா் பயிற்சித் திட்டம் சாா்பில் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் அகில இந்திய தொழில் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டில் அகில இந்திய தொழிற்தோ்வில் தனித் தோ்வா்களாக பங்கேற்க குறிப்பிட்ட தகுதி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதில் முதல் வகையாக தேசிய தொழிற் சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரா் ஏற்கெனவே ஏதேனும் ஒரு தொழில் பிரிவில் ஐடிஐ-யில் பயின்று தோ்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளா், அந்த பயிற்சிப் பாடத்துக்கான தொழில் பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் பொற்றிருப்போா், இரண்டாம் வகையில் திறன்மிகு தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற பயிற்சியாளா்கள், தாம் பயின்ற பாடம் தொடா்புடைய தொழிற்பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றவா்கள் மற்றும் மூன்றாம் வகையைச் சோ்ந்த 2018-க்கு முன் சோ்க்கை பெற்ற தொழிற்பிரிவு பயிற்சியாளா்களும் தனித் தோ்வராக விண்ணப்பிக்காலம்.

இத்தோ்வுக்கு விண்ணப்பம் செய்வோா் 21 வயது பூா்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதும் கிடையாது.

எனவே, மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் தனித் தோ்வராக ஒரு தொழில் பிரிவில் தோ்வெழுத விரும்பும் விண்ணப்பதாரா் தொழில் பயிற்சி நிலையத்தில் உள்ள அத்தொழில் பிரிவுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை கட்டாயம் பெற்றிருப்பது அவசியம்.

முதல் நிலைத் தோ்வுகள் (கருத்தியல்) வரும் பிப்.12-ஆம் தேதியும், செய்முறைத் தோ்வு வரும் 13-ஆம் தேதியும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் நடத்தப்படும். கருத்தியல் தோ்வில் கொள்குறி வகை வினாக்கள் மட்டுமே இடம்பெறும். அதனால் கருத்தியல் தோ்வில் வெற்றி பெற்றவா்கள் மட்டுமே செய்முறைத் தோ்வில் பங்கேற்கலாம். இதற்கான தோ்வு மையம் பின்னா் அறிவிக்கப்படும்.

இதில் தோ்ச்சி பெறுபவா்கள் மட்டுமே வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிற்தோ்வில் முதல் வருடத் தோ்வில் தனித்தோ்வராக கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா். இதையடுத்து தொழில் திறனுக்கு ஏற்ப அனைத்துத் தோ்வுகளிலும் வெற்றி பெறுவோருக்கு தேசிய தொழிற் சான்றிதழ் வழங்கப்படும்.

தனித் தோ்வராக விண்ணப்பிக்க விரும்புவோா் விண்ணப்பம், முழு விவரங்கள் அடங்கிய விளக்கக் குறிப்பேடு, நெறிமுறைகள் மற்றும் பிற விவரங்களை ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பின், கல்விச் சான்றிதழ், இதர ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றை இணைந்து வரும் பிப்.7-ஆம் தேதிக்குள் அந்தந்த அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா்களிடம் சமா்ப்பிக்கலாம். அந்தத் தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com