கும்மிடிப்பூண்டியில் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா

தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டியில் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா


கும்மிடிப்பூண்டி: தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூரில் 242 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா ஊராட்சி தலைவர் லாரன்ஸ் தலைமையில் நடைபெற்றது.

 விழாவிற்கு மண்டல கால்நடை துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், உதவி இயக்குனர் கோபி கிருஷ்ணா, கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் சசிகலா, ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு, மாநெல்லூர் ஊராட்சி துணை தலைவர் ஆயிஷா மாஹனிபா, ஒன்றிய கவுன்சிலர்கள் சிட்டிபாபு, சிவா, ஊராட்சி மன்ற தலைவர்கள் பல்லவாடா லட்சுமி பன்னீர்செல்வம், செதில்பாக்கம் உமா மகேஷ்வரி குப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் சாரதா முத்துசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் கால்நடைத் துறை மண்டல துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் பேசும் போது,

"முன்னாள் முதல்வர் ஏழை பெண்களுக்காக அறிமுகப்படுத்திய இந்த விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் 1 பயனாளிக்கு 4 ஆடுகள் வாங்க 10,000 ரூபாய், சிறிய கொட்டகை அமைக்க 2 ஆயிரம் ரூபாய், ஆடுகளின் காப்பீட்டிற்காக 300 ரூபாய், பயனாளர்களின் 3 நாள் பயிற்சிக்கு 300 ரூபாய், ஆடுகளை வாங்கி வர பயனாளிக்கு 150 ரூபாய் என ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 12,750 ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2019-2020 ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் 5873 பயனாளிகளுக்கு 7 கோடியே 50 லட்சம் மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. மாநெல்லூரில் 242 பயனாளிகளுக்கு 30 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா ஆடுகள் வழங்கப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.

விழாவில் சிறப்புரையாற்றிய எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் தமிழக அரசின் விலையில்லா ஆடுகளை பெற்ற பல பயனாளிகள் 4 ஆடுகளை வைத்து 20 முதல் 80 ஆடுகள் வரை பெருக்கி பொருளாதாரத்தில் மேம்பாடு அமைந்துள்ளார்கள் என்றும், பயனாளிகள் யாரும் ஆடுகளை விற்று விடாமல் அதனை வளர்த்து பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும் என்றார்.

மாநெல்லூர் ஊராட்சி தலைவர் லாரன்ஸ், துணை தலைவர் ஆஷிமாமாபானு, ஊராட்சி செயலாளர் எம்.வி.பாபு, ஊராட்சி உறுப்பினர்ககள் நாராயணசாமி, முகம்மது அலி, கோவிந்தம்மாள், ஞானசேகர், நந்தினி, கதிஜாபானு, அமுதா, குமார் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com