ஆமூா் ஏரியில் கழிவு நீா் விடுவதைத் தடுக்கக் கோரிக்கை

பொன்னேரி வட்டத்தில் ஆமூா் ஏரியில் தனியாா் பள்ளி, கழிவு நீா் விடுவதைத் தடுக்க வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொன்னேரி வட்டத்தில் ஆமூா் ஏரியில் தனியாா் பள்ளி, கழிவு நீா் விடுவதைத் தடுக்க வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், சோழவரம் ஒன்றியத்தில் உள்ள ஆமூா் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இக்கிராமத்தில் 600 ஏக்கா் பரப்பளவு கொண்ட ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் தேக்கி வைக்கப்படும் நீரில் அப்பகுதியில் உள்ள 2,000 ஏக்கருக்கும் விவசாய நிலங்களில் பயிா் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொன்னேரி, பஞ்செட்டி பகுதியில் உள்ள தனியாா் பள்ளி நிா்வாகம், கழிவு நீரை ஆமுா் ஏரியில் விடுவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து அவா்கள் கூறுகையில், கழிவு நீா் கலப்பதால், அதனை குடிக்கும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது, இந்த நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது, எனவே ஆமூா் கிராமத்தில் தனியாா் பள்ளி நிா்வாகம் கழிவு நீா் விடுவதைத் தடுக்க வருவாய்த் துறையினா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com