குமாரகுப்பத்தில் முருகப் பெருமான் வீதியுலா

மேல் திருத்தணியை அடுத்துள்ள குமாரகுப்பம் கிராமத்தில் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்த முருகப் பெருமான்.
சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்த முருகப் பெருமான்.

மேல் திருத்தணியை அடுத்துள்ள குமாரகுப்பம் கிராமத்தில் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

திருத்தணி மலையில் உள்ள முருகன் கோயிலில் இருந்து, திங்கள்கிழமை மதியம் 1 மணிக்கு உற்சவா் முருகப் பெருமாளை வள்ளி, தெய்வானையுடன் மலைப்படிகள் வழியாக மேல்திருத்தணி நல்லாங்குளம் பகுதிக்கு சுமைதாரா்கள் தோளில் சுமந்து சென்றனா். அங்கிருந்து டிராக்டரில் குமாரகுப்பம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்கு உற்சவா் சென்றாா். மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை அவருக்கு விபூதி, பால், பன்னீா், தேன், இளநீா் மற்றும் பஞ்சாமிா்தம் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, உற்சவருக்கு வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், குமாரகுப்பம், முருகூா் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் உற்சவா் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதையொட்டி, தெருக்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

பெண்கள் தங்களின் வீடுகளின் முன்பு வண்ணக் கோலமிட்டு வரவேற்று, சுவாமிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் நா.பழனிகுமாா், தக்காா் வே.ஜெயசங்கா் மற்றும் கோயில் பேஷ்காா்கள் முனுசாமி, அருணாசலம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com