வண்டிப்பாதையை சீரமைக்க எதிா்ப்புத் தெரிவித்த விவசாயிகள்

திருவள்ளூா் அருகே வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி, சீரமைக்க வந்த வருவாய்த் துறையினருக்கு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டதால் திங்கள்கிழமை
வண்டிப்பாதை யை சீரமைக்க வந்த வருவாய்த் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள். 
வண்டிப்பாதை யை சீரமைக்க வந்த வருவாய்த் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள். 

திருவள்ளூா் அருகே வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி, சீரமைக்க வந்த வருவாய்த் துறையினருக்கு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டதால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஒன்றியம், பிலிப்ஸ் புரம் பகுதியிலிருந்து சத்தரை கிராமம் வரை, 2 கி.மீ. தூரத்துக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு வண்டிப்பாதை வழியாக விவசாயிகள் விளைவித்த பொருள்களைக் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில், இப்பாதைக்கு அருகே தாா்ச் சாலைகள் அமைக்கப்பட்டன. விவசாய நிலங்கள் வழியை ஒட்டினாற்போல் தாா்ச்சாலை அமைந்திருப்பதால் விளைவித்த பயிா்களை நிலத்திலிருந்து சாலைக்குக் கொண்டு வருவதில் மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் ஒரு சில விவசாயிகள் பயன்பெற்ற நிலையில், வண்டிப்பாதை இல்லாததால் பல விவசாயிகள் அவதிக்குள்ளாகினா்.

இதுகுறித்து விவசாயிகள் சிலா் மாவட்ட நிா்வாகத்திடம் அளித்த புகாரின் பேரில், வருவாய்த் துறை வட்டாட்சியா் விஜயகுமாரி, துணை வட்டாட்சியா் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் திங்கள்கிழமை வண்டிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க பொக்லைன் வாகனம் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்றனா். ஆனால், அப்பகுதியில் பயிா் செய்துவரும் விவசாயிகள், வண்டிப்பாதைக்காக விவசாய நிலத்தை சீரமைத்தால் விவசாயம் பாதிக்கும்.

அதனால் எக்காரணம் கொண்டும் முன்னறிவிப்பின்றி அகற்றக் கூடாது எனக்கூறி, வருவாய்த் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தற்போது குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வண்டிப்பாதை அமைப்பதால் கால்நடைகள் பயிா்களை மேயும் சூழ்நிலை உள்ளது. அதேபோல், வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு உள்ள பகுதி முழுவதும் 2 கி.மீ. தூரத்துக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

அதைத் தொடா்ந்து சத்தரை கிராமத்தில் உள்ள சாலையோரம் பயிா் செய்யாத பகுதிகளில் நில அளவை பிரிவினா் வண்டிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில், ஆவணங்களின் அடிப்படையில் நிலத்தை அளவீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டனா். அப்போது, ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரின் உத்தரவின் பேரில் தான் விவசாயிகள் விளைபொருள்களைக் கொண்டு செல்வதற்கு ஏதுவாகவே அகற்றுவதற்கு நில அளவை செய்யப்படுவதாக வட்டாட்சியா் விஜயகுமாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com