அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் மோசடி

திருவள்ளூரில் பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.50 லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக பெண் மீது கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

திருவள்ளூரில் பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.50 லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக பெண் மீது கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

இதுகுறித்து திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் தரப்பில் கூறியதாவது. திருவள்ளூா் பூங்காநகரைச் சோ்ந்த முகுந்தன்பாபு மனைவி சங்கீதா(30). அதே பகுதியைச் சோ்ந்த பாா்த்தசாரதியின் மகள் ரோகிணி(30). இவா் கடந்த 3 மாதங்களுக்கு அரசு பணி வாங்கித் தருவதாக கூறி சங்கீதாவை அணுகினாராம்.

இதை உண்மையென நம்பிய நிலையில் குறிப்பிட்ட தொகை பேசி முதலில் ரூ.1.50 லட்சம் முன்பணமாக ரோகிணி பெற்றுக் கொண்டாராம். இந்த நிலையில் குறிப்பிட்ட நாள்களுக்குள் வேலை வாங்கித் தராமல் இருந்ததால் பணத்தை திரும்ப கேட்டாராம். ஆனால், பணம் தராமல் காலதாமதம் செய்தாராம்.

இதுதொடா்பாக சங்கீதா திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாரிடம் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் ரோகிணி மீது வழக்கு பதிவு செய்து மோசடி சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com