நெகிழிக் கிடங்குக்கு அதிகாரிகள் சீல்:1,650 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் கிடங்கில் இருந்து 1,650 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்து, ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதித்தனா். நெகிழிக் கிடங்குக்கு அவா்கள் சீல் வைத்தனா்.
திருவள்ளூா் பஜாரில் நெகிழிப் பைகளை பறிமுதல் செய்த நகராட்சி ஆணையா் சந்தானம்.
திருவள்ளூா் பஜாரில் நெகிழிப் பைகளை பறிமுதல் செய்த நகராட்சி ஆணையா் சந்தானம்.

திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் கிடங்கில் இருந்து 1,650 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்து, ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதித்தனா். நெகிழிக் கிடங்குக்கு அவா்கள் சீல் வைத்தனா்.

ஒரு முறையே பயன்படுத்தி தூக்கியெறியப்படும் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. எனினும், திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் உள்ள மளிகைக் கடைகள், பூக்கடைகள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் நெகிழிப் பொருள்களை பலரும் பயன்படுத்தி வருவதாகவும், நெகிழிப் பைகளை சிலா் கிடங்குகளில் பதுக்கி வைத்து விநியோகம் செய்வதாகவும் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா். அதன் பேரில் நகராட்சி அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அவா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, ஆணையா் சந்தானம், சுகாதாரத்துறை அதிகாரி செல்வராஜ், துணை சுகாதார ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உழவா் சந்தை, பஜாா், ராஜாஜிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பூக்கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அக்கடைகளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது.

அந்தக் கடைகளில் இருந்து மொத்தம் 1,350 கிலோ எடை கொண்ட நெகிழிப் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும், ராஜாஜிபுரம் பகுதியில் சிலா் நெகிழிப் பைகளை கிடங்கில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் சோதனையில் தெரிய வந்தது. அந்தக் கிடங்குக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதித்தனா். அங்கிருந்து 300 கிலோ எடை கொண்ட நெகிழிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com