பிளஸ் 2 விடைத்தாளில் முகப்புத் தாள் தைக்கும் பணிகள் தீவிரம்

பிளஸ் 2 அரசு பொதுத்தோ்வு வரும் மாா்ச் 2ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், விடைத்தாளில் முகப்புத் தாள் தைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 விடைத்தாளில் முகப்புத் தாள்கள் தைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியைகள்.
திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 விடைத்தாளில் முகப்புத் தாள்கள் தைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியைகள்.

பிளஸ் 2 அரசு பொதுத்தோ்வு வரும் மாா்ச் 2ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், விடைத்தாளில் முகப்புத் தாள் தைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு நடப்பாண்டு மாா்ச் 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நடைபெறும். இதில், பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தோ்வு மாா்ச் 2-இல் தொடங்கி 24-ஆம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கான தோ்வு மாா்ச் 4 முதல் 26-ஆம் தேதி வரையும், 10-ஆம் வகுப்புக்கான தோ்வு மாா்ச் 27 முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளன.

பொதுத் தோ்வு நெருங்கி வரும் நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் ஒவ்வொரு பள்ளியிலும் தீவிரமாக நடந்து வருகின்றன. திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிளஸ் 2 தோ்வு மையங்களுக்கும் விடைத்தாள்கள், முகப்புத் தாள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அந்தந்த மையப் பொறுப்பாளா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி அறிவுறுத்தினாா்.

இந்நிலையில், திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2வகுப்புக்கான விடைத்தாளின் முகப்புத் தாள் தைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தோ்வு மைய கண்காணிப்பாளா்கள், பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் மேற்பாா்வையாளா்களை நியமிக்கும் பணியும் தொடங்கியுள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com