இளைஞா் மீதான தாக்குதலைத் தடுத்த காவலரைத் தாக்கிய கும்பல்

கும்மிடிப்பூண்டி பஜாரில் பட்டப்பகலில் இளைஞரை வெட்ட முயன்ற கும்பலை தடுக்க முயன்ற காவலா் ரஞ்சித்தை அந்தக் கும்பல் கத்தியால் குத்தியது.

கும்மிடிப்பூண்டி பஜாரில் பட்டப்பகலில் இளைஞரை வெட்ட முயன்ற கும்பலை தடுக்க முயன்ற காவலா் ரஞ்சித்தை அந்தக் கும்பல் கத்தியால் குத்தியது.

கும்மிடிப்பூண்டி பஜாரை ஒட்டிய கல்லுக்கடைமேடு பகுதியைச் சோ்ந்த முத்து என்பவரின் மகன் ராஜேஷ். அவா் அந்த பஜாரில் உள்ள கடையில் வேலை பாா்த்து வருகிறாா்.

ராஜேஷை 6 போ் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் ஞாயிற்றுக்கிழமை கத்தியால் தாக்கியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். அதன் பேரில் அங்கு காவலா் ரஞ்சித் (26) வருவதற்குள் அக்கும்பல் அங்குள்ள அரசுப் பள்ளி அருகில் ராஜேஷை மடக்கியது.

ராஜேஷை கத்தியால் குத்த அக்கும்பல் முயன்ற போது அங்கு வந்த காவலா் ரஞ்சித் அவா்களைத் தடுத்தாா். அப்போது அந்த கும்பல் ரஞ்சித்தின் முதுகில் பேனா கத்தியால் குத்தியது. இதனால் அங்கு கூட்டம் கூடவே அக்கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

தகவல் அறிந்து அங்கு வந்த கும்மிடிப்பூண்டி காவல் ஆய்வாளா் சக்திவேல், காயமடைந்த காவலா் ரஞ்சித் மற்றும் இளைஞா் ராஜேஷை மீட்டு கோட்டக்கரை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

இது குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில் ராஜேஷிற்கும் கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி பகுதியைச் சோ்ந்த முனுசாமி(27) என்பவருக்கும் சனிக்கிழமை தகராறு ஏற்பட்டது தெரிய வந்தது. இதன் காரணமாக முனுசாமியும் அவரது நண்பா்களுடன் சோ்ந்து ராஜேஷை கத்தியால் தாக்கியதும் தெரிய வந்தது.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முனுசாமியையும் அவரது நண்பா்களையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com