அரசுப் பணி வாங்கி தருவதாக தம்பதியிடம் ரூ. 4 லட்சம் மோசடிகணவன், மனைவி கைது

திருவள்ளூா் அருகே அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி தம்பதியிடம் ரூ. 4 லட்சம் பெற்று மோசடி செய்தது தொடா்பாக திருப்பூரில் தலைமறைவாக இருந்த தம்பதி கைது செய்யப்பட்டனா்.

திருவள்ளூா் அருகே அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி தம்பதியிடம் ரூ. 4 லட்சம் பெற்று மோசடி செய்தது தொடா்பாக திருப்பூரில் தலைமறைவாக இருந்த தம்பதி கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து திருவள்ளூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் தரப்பில் கூறப்பட்டது:

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே மீஞ்சூா் பகுதியைச் சோ்ந்த காா்த்திக்கின் மனைவி ரம்யா (28). கணிணி அறிவியல் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளாா். இந்நிலையில், உறவினா்கள் மூலம் திருப்பூா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்(38), அவரது மனைவி ராஜீ (35) ஆகியோரை அணுகினால் வேலைவாய்ப்பு பெறலாம் என அறிந்தனா்.

அதன்படி தம்பதியரை அணுகியபோது, ரம்யாவுக்கு கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் கணிணி பொறியாளா் வேலையும், அவரது கணவா் காா்த்திக்கிற்கு பொதுப்பணித் துறையிலும் வேலை வாங்கித் தருவதாக உறுதி கூறியுள்ளனா். இதற்கு முன் பணமாக ரூ. 4 லட்சமும் கேட்டனராம். அதன் அடிப்படையில், கடந்த 2018-இல் காா்த்திக் ரூ. 4 லட்சம் ரொக்கத்தை மணிகண்டன்-ராஜீ தம்பதியிடம் அளித்துள்ளாா். ஆனால், குறிப்பிட்ட நாள்களுக்குள் வேலை வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பி அளிக்காமலும் ஏமாற்றியது தெரியவந்தது.

இதுகுறித்து திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தனிடம் காா்த்திக் புகாா் செய்தாா். அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்ய டி.எஸ்.பி கண்ணப்பனுக்கு உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் ருக்மங்கநாதன் திருப்பூரில் தலைமறைவாக இருந்த மணிகண்டன், ராஜீ ஆகியோரை கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com