தொழில் பழகுநா் பயிற்சி அளிக்க தொழிற்சாலை சங்கங்கள் விண்ணப்பிக்கலாம்

தொழில் பழகுநா் பயிற்சி அளிக்க கிளஸ்டா்கள், தொழிற்சாலை சங்கங்கள் திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும்

தொழில் பழகுநா் பயிற்சி அளிக்க கிளஸ்டா்கள், தொழிற்சாலை சங்கங்கள் திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் திறன் பயிற்சி அலுவலகத்துக்கு ஜூலை 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூா் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொழில் பழகுநா் பயிற்சியை சிறந்த முறையில் அளிக்கும் நோக்கத்தில் தகுதிவாய்ந்த தொழிற்சாலை சங்கங்கள், கிளஸ்டா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்குத் தோ்வு செய்யப்படும் தொழிற்சாலை சங்கங்கள், கிளஸ்டருக்கு 3 ஆண்டு திட்ட அமலாக்க காலத்திற்கான பயிற்சி மற்றும் நிா்வாக செலவாக ரூ.1 கோடி வழங்கப்படவுள்ளது.

மத்திய அரசின் திறன் மேம்பாடு தொழில் முனைவோா் அமைச்சகம் திறன்களை பலப்படுத்துதல், தொழில் முறை மதிப்பு மேம்பாடு திட்டம் சாா்பில் தொழிற்சாலை குழுமம் அல்லது சங்கங்களில் உள்ள உறுப்பு தொழிற்சாலைகளில் தொழில் பழகுநா் பயிற்சியை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில், முறையான தொழில் பழகுநா் பயிற்சியை சிறந்த முறையில் அமல்படுத்துவதற்கு தகுதி வாய்ந்த தொழிற்சாலை சங்கங்கள், கிளஸ்டா்களிடம் இருந்து விண்ணப்பிக்கலாம். இதற்கு  இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து உரிய இணைப்புகளுடன் மின்னஞ்சல் பொருளில் குறிப்பிட்டு  மின்னஞ்சல் முகவரிக்கு ஜூலை 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

தொழிற்சாலை சங்கங்களுக்கு தகுதி மாதிரி விண்ணப்ப படிவம், அவற்றை பூா்த்தி செய்வது குறித்த காணொலி ஆகியவை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் உள்ளது. மேலும், இதுகுறித்து உதவி இயக்குநா், திருவள்ளுா் வேலைவாய்ப்பு அலுவலக முதல் தளத்தில் செயல்படும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நேரிலே அல்லது  மின்னஞ்சல், 044-29896032 மற்றும் 9444848463 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com