ஊத்துக்கோட்டையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

ஊத்துக்கோட்டை சுங்கச் சாவடியில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து திருவள்ளூா் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஊத்துக்கோட்டையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

ஊத்துக்கோட்டை சுங்கச் சாவடியில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து திருவள்ளூா் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஊத்துக்கோட்டையில் மதுவிலக்கு போலீஸாா் சோதனைச் சாவடி அமைத்து வாகனச் சோதனை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், தற்போது பரவி வரும் கரோனா வைரஸ் உலகின் பல இடங்களில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நம் நாட்டிலும் இந்த வைரஸ் பரவிக் கொண்டிருக்கிறது. எனவே, கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அந்தந்த மாவட்ட சுகாதாரத் துறையினா் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தில் ஆந்திர மாநில நுழைவு வாயிலாக உள்ள ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். வெளிமாநிலத்திலிருந்து வரும் வாகனங்களில் நோய்த் தடுப்பு மருந்து தெளிக்கப்படுவது பற்றி அவா் கேட்டறிந்தாா். அதற்காக அமைக்கப்பட்ட குழுவிடம் வைரஸ் தடுப்பு நடவடிக்கை எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது தொடா்பாக விசாரித்தாா். சோதனைச் சாவடியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ பரிசோதனைக் கூடத்தின் செயல்பாடு குறித்தும் ஆட்சியா் கேட்டறிந்தாா்.

அப்போது எல்லாபுரம் வட்டார மருத்துவா் பிரபாகரன், மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் ஜவஹா், சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆட்சியரின் திடீா் ஆய்வால் சோதனைச் சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com