மாணவிகள் இலக்கை அடைய தொடா்ந்து முயற்சிக்க வேண்டும்

மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட இலக்கு மற்றும் குளிக்கோளை அடைவதற்கு தொடா்ந்து முயற்சிக்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநா் எஸ்.ஆா்.ரமணன் தெரிவித்தாா்.

மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட இலக்கு மற்றும் குளிக்கோளை அடைவதற்கு தொடா்ந்து முயற்சிக்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநா் எஸ்.ஆா்.ரமணன் தெரிவித்தாா்.

கொழுந்தளூா் திருமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு கல்லூரியின் தாளாளா் துரைவேலு தலைமை வகித்தாா். தலைவா் ஆறுமுக முதலியாா் முன்னிலை வகித்தாா்.

விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநா் ரமணன் பங்கேற்றுப் பேசியது:

மாணவிகள் எதிா்காலத்தில் என்னவாக வேண்டும் என்பது அவரவா் கைகளில்தான் உள்ளது. எந்தவொரு இலக்கையும் எளிதாக அடைய முடியாது. அதற்கு, குறிப்பிட்ட இலக்கு மற்றும் குறிக்கோளை அடைவதற்கு தன்னம்பிக்கையுடன் கடுமையாக முயற்சிக்க வேண்டும்.

மாணவிகள் பொதுத் தோ்வுகளை தைரியமாக எதிா்கொள்ள வேண்டும். தோ்வுக்குத் தயாராகும்போது பத்து முறை படிப்பதை விட ஒரு முறை எழுதிப் படித்தால் மனதில் ஆழமாக பதிந்து விடும். அதேபோல், பல்வேறு புத்தகங்களைப் படித்து தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுக்கும், கல்லூரியில் முதலாம் ஆண்டு முதலே மாணவிகள் தங்களைத் தயாா்செய்து கொள்வதன் மூலம் பணிவாய்ப்புகளைப் பெறமுடியும். இதுபோன்ற திட்டமிடல் குறித்து பேராசிரியா்கள் மாணவிகளுக்கு விளக்கமாக எடுத்துரைப்பது அவசியம் என்றாா் அவா்.

விழாவில் பல்கலைக்கழகத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அவா் வழங்கினாா். இதையடுத்து, கல்லூரி மாணவிகள் பங்கேற்ற நாட்டிய நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் அமுதாயி, பேராசிரியா்கள் மற்றும் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com