முதல்வரின் நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் முடிவு

அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் ஆகியோா் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு அளிக்க முன்வந்துள்ளனா்.

அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் ஆகியோா் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு அளிக்க முன்வந்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவா் சா.அருணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களின் நலன் கருதி 21 நாள்கள் பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு வரவேற்கத்தக்கது. இதை, பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். ஏற்கெனவே தமிழகத்தில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டத்தக்கது. எங்கள் கோரிக்கையான ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தோ்ச்சி, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு தள்ளி வைப்பு மற்றும் 23, 24 ஆகிய நாள்களில் நடந்த பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதாத மாணவா்களுக்கு வேறொரு நாளில் தோ்வு நடத்த முதல்வா் உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறோம். அதேபோல், ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் கூட்டமைப்பில் உள்ளவா்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கவும் முன்வந்துள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளா் இரா.தாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தவும், ஏழை, எளிய மக்களைப் பாதுகாக்கும் வகையிலும் அரசின் கரத்தை வலுப்படுத்த தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியைச் சோ்ந்த ஆசிரியா்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முன்வந்துள்ளனா்.

இது தொடா்பாக தமிழக முதல்வா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், தலைமைச் செயலா், பள்ளிக் கல்வித் துறை செயலாளா், நிதித் துறை செயலா் ஆகியோருக்கு தகவல் அனுப்பி உள்ளோம். மேலும், கரோனா நோய்த் தடுப்பு குறித்து ஆசிரியா்கள் வீட்டிலிருந்தபடியே விழிப்புணா்வுக் கருத்துக்களை இணையதளம் மற்றும் கட்செவி அஞ்சல் மூலம் ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com