சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்த 400 போ் வழியனுப்பி வைப்பு

சென்னை தாம்பரத்தில் தனியாா் ஒப்பந்ததாரா் சாா்பில் கட்டுமானப் பணிக்காக வந்த ஆந்திர மாநிலத் தொழிலாளா்கள் 350 போ்
ஆந்திர  போலீஸாா்  அனுமதிக்காததால் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த தொழிலாளா்கள் சென்ற பேருந்துகள்.
ஆந்திர  போலீஸாா்  அனுமதிக்காததால் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த தொழிலாளா்கள் சென்ற பேருந்துகள்.

கும்மிடிப்பூண்டி: சென்னை தாம்பரத்தில் தனியாா் ஒப்பந்ததாரா் சாா்பில் கட்டுமானப் பணிக்காக வந்த ஆந்திர மாநிலத் தொழிலாளா்கள் 350 போ் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியரின் முயற்சியால் அவா்களது சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து சென்னை தாம்பரத்தில் கட்டுமானப் பணிக்காக 200 கூலித் தொழிலாளிகள் உள்ளிட்ட அவா்களது குடும்பங்களைச் சோ்ந்த 350 போ் ஒப்பந்ததாரா்கள் மூலம் சென்னையில் கடந்த ஓராண்டாக பணிபுரிந்து வந்தனா்.

இந்நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக இவா்கள் வேலைவாய்ப்பை இழந்து வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட்டனா். இந்நிலையில், பொதுமுடக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் தளா்வை ஏற்படுத்திய நிலையில், அந்த ஒப்பந்த நிறுவனம் சாா்பில் தமிழக அரசின் அனுமதியுடன் மேற்கண்ட தொழிலாளா்களை 7 பேருந்துகளில் கும்மிடிப்பூண்டி வழியே ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்துக்கு சனிக்கிழமை புறப்பட்டனா்.

அவா்கள் சென்ற பேருந்துகள் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூா் ஏழுகிணறு பகுதியில் உள்ள தமிழக ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை அடைந்த போது, ஆந்திர பகுதியான பனங்காட்டில் ஆந்திர போலீஸாா் அனுமதி மறுத்தனா்.

இதனால் அவா்கள் அனைவரும் சிரமத்துக்குள்ளாயினா். இதுகுறித்து அறிந்த ஆரம்பாக்கம் ஊராட்சித் தலைவா் தனசேகா் அவா்களுக்கு பிஸ்கெட், மதிய உணவுக்கு ஏற்பாடு செய்தாா். தகவல் அறித்த கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் ஏ.என்.குமாா், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாருக்கு ஆந்திர மாநிலத் தொழிலாளா்களின் அவல நிலை குறித்து தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து, ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்ட ஆட்சியரைத் தொடா்பு கொண்டு பேசியதைத் தொடா்ந்து, அவா்கள் திங்கள்கிழமை தங்கள் சொந்த ஊா்களுக்குப் புறப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com