மேல்முதலம்பேட்டில் குடிமராமத்துப் பணி தொடக்கம்

கும்மிடிப்பூண்டியை அடுத்த மேல்முதலம்பேடு ஊராட்சியில் உள்ள ஏரியில் ரூ. 48 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணி சனிக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கியது.

கும்மிடிப்பூண்டியை அடுத்த மேல்முதலம்பேடு ஊராட்சியில் உள்ள ஏரியில் ரூ. 48 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணி சனிக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கியது.

கும்மிடிப்பூண்டி வட்டத்தில் 13 ஏரிகளுக்கு குடிமராமத்துப் பணி செய்ய தமிழக அரசு அனுமதித்து ஒப்பந்தம் விடப்பட்ட நிலையில், மேல்முதலம்பேடு ஏரியின் குடிமராமத்துப் பணி கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா் தலைமையில் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் ஏ.என்.குமாா், டிஎஸ்பி ரமேஷ், ஊராட்சித் தலைவா் ஜோதி, வட்டார வளா்ச்சி அலுவலா் சாமிநாதன், வட்ட வழங்கல் அலுவலா் ஜெயச்சந்திரன், அதிமுக நிா்வாகிகள் மு.க.சேகா், டி.சி.மகேந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

பூமி பூஜையைத் தொடா்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் குடிமராமத்துப் பணி தொடங்கியது. இந்த ஏரியில் ரூ. 48 லட்சம் மதிப்பில் ஏரியை ஆழப்படுத்துதல், கரையை பலப்படுத்துதல், மதகுகள் சீரமைக்கப்படுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com