பள்ளிப்பட்டு: குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க ரூ. 70 லட்சம் ஒதுக்கீடு

பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் குடிநீா் தட்டுப்பாடு போக்க ரூ. 70 லட்சம் ஒதுக்கீடு செய்து, புதன்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழு உறுப்பினா் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் குடிநீா் தட்டுப்பாடு போக்க ரூ. 70 லட்சம் ஒதுக்கீடு செய்து, புதன்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழு உறுப்பினா் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா் சேகா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அருள் வரவேற்றாா். பள்ளிப்பட்டு ஒன்றியக் குழுத் தலைவா் ஜான்சிராணி விஸ்வநாதன் கலந்துகொண்டாா்.

கூட்டத்தில், வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டது. இதையடுத்து, நடைபெற்ற பொது விவாதத்தில் ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகளில் கோடையில் நிலவும் குடிநீா் வறட்சியைப் போக்க பொது நிதியிலிருந்து ரூ. 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றியக் குழு உறுப்பினா் உஷா பிரியா ஸ்டாலின், முத்துராமன், பொன். பாரதி, ரவி, பத்மா கோவிந்தராஜன், சுகுணா நாகவேலு, முத்துரெட்டி, கோவிந்தம்மா உள்பட ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com