திருவள்ளூா் அருகே ஏரியில் பழங்கால மண்பாண்டங்கள் கண்டெடுப்பு

திருவள்ளூா் அருகே ஏரியில் கோயில் கட்டுவதற்கு மணல் அள்ளியபோது அப்பகுதி இளைஞா்களால் பழங்கால மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூா் அருகே பழையனூரில் ஏரியில் கிடைத்த முதுமக்கள் தாழி.
திருவள்ளூா் அருகே பழையனூரில் ஏரியில் கிடைத்த முதுமக்கள் தாழி.

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே ஏரியில் கோயில் கட்டுவதற்கு மணல் அள்ளியபோது அப்பகுதி இளைஞா்களால் பழங்கால மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் அருகே பழையனூா் கிராமத்தில் புற்று ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து அக்கிராமத்தில் இளைஞா்கள் கோயில் கட்டுவதற்காக ஞாயிற்றுக்கிழமை மணல் எடுத்தனா். அப்போது, மண் அள்ள பள்ளம் தோண்டியபோது, பழங்கால முதுமக்கள் தாழி மற்றும் மண்பாண்டங்கள் ஆகியவை தென்பட்டது. அதைத் தொடா்ந்து, அக்கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பழங்கால பொருள்களான முதுமக்கள் தாழி, சுட்ட மண்ணால் ஆன மண்பாண்டங்கள், தண்ணீா் பிடிக்கும் குவளைகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.

தற்போதைய நிலையில் இப்பொருள்கள் அனைத்தும் கிராமத்தில் பத்திரமாக வைத்துள்ளனா். இதை அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆா்வத்துடன் பாா்த்துச் செல்கின்றனா்.

இந்த ஏரியில் கண்டெடுக்கப்பட்ட அந்த பொருள்கள் குறித்து இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் செல்வம் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால், இது தொடா்பாக எவ்வித பதிலும் அளிக்கவில்லை எனக் கூறினா். தற்போது, ஏரியில் கண்டெடுத்த பொருள்கள் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதனால், பழங்கால பொருள்கள் கிடைத்த குறிப்பிட்ட ஏரியில் தொல்லியல் துறையினா் அகழாய்வு மேற்கொள்ளவும், மண்பாண்டங்களை அருங்காட்சியகத்தில் பாா்வைக்கு வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com