வடமாநில தொழிலாளர்கள் 13360 பேர் 17 சிறப்பு ரயில்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு

பொன்னேரி வட்டத்தில் பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த 13360 வட மாநில தொழிலாளர்கள் 17 சிறப்பு ரயில்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக பொன்னேரி வருவாய்த்துறையினர்
வடமாநில தொழிலாளர்கள் 13360 பேர் 17 சிறப்பு ரயில்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு

பொன்னேரி வட்டத்தில் பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த 13360 வட மாநில தொழிலாளர்கள் 17 சிறப்பு ரயில்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக பொன்னேரி வருவாய்த்துறையினர் அனுப்பி வைத்தனர். 

மார்ச் மாதம் 24-ம் தேதி கரோனா தொற்று  தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் தாங்கள் குடியிருந்த இடங்களில் முடங்கி இருந்தனர். அவர்களுக்கு உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை சமூக நல ஆர்வலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் வழங்கி வந்தனர். பொன்னேரி  வட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தொழில் நிறுவனங்களில், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், பிகார், மேற்கு வங்காளம், ஒடிசா, மத்தியப் பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களிலை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.  

தொடர்ந்து இல்லாததன், காரணமாக அவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல முடிவு செய்தனர். சிலர் சாலை வழியே  நடந்து செல்ல முயன்றனர். சிலர் காவல் நிலையங்களில் குவிந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரிரவிக்குமார் உத்தரவின் பேரில், இவர்களை பொன்னேரி காவல்துறை உதவியுடன் வருவாய்த் துறையினர் மீட்டு, மீஞ்சூர், பாடியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் முகாம்கள் ஏற்படுத்தி அங்கு அவர்களை தங்க வைத்தனர். அவர்களுக்கு தேவையான குடிநீர் உணவுகள் ஆகியவற்றை வழங்கி வந்தனர்.

இதையடுத்து பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் முன்னிலையில் பொன்னேரி வட்டத்தை சேர்ந்த 8700 பேர் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் நடந்து சென்ற 4660 பேர் என 13360 பேர் அரசு பஸ்களில் ஏற்றி திருவள்ளூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் 17 சிறப்பு ரயில்கள் மூலமாக அவர்களது சொந்த ஊர்களுக்கு வருவாய்த்துறையினர் அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com