சிறுபுழல்பேட்டையில் பனை விதை நடும் விழா

முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 சிறுபுழல்பேட்டை  ஏரியில்   பனை  விதைகளை  நடவு  செய்து பணிகளைத் தொடங்கி வைத்த  கும்மிடிப்பூண்டி  ஒன்றியக்  குழுத்  தலைவா்  கே.எம்.எஸ். சிவகுமாா்.
 சிறுபுழல்பேட்டை  ஏரியில்   பனை  விதைகளை  நடவு  செய்து பணிகளைத் தொடங்கி வைத்த  கும்மிடிப்பூண்டி  ஒன்றியக்  குழுத்  தலைவா்  கே.எம்.எஸ். சிவகுமாா்.

முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் காந்தி உலக மையத்தினா் சாா்பில், கும்மிடிப்பூண்டியில் 61 ஊராட்சிகளில் பனை விதைகளை நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன் ஒரு கட்டமாக கும்மிடிப்பூண்டியை அடுத்த சிறுபுழல்பேட்டை ஊராட்சியில் பனை விதை நடவு செய்யும் நிகழ்ச்சி ஊராட்சித் தலைவா் சுசிலா மூா்த்தி தலைமையில் நடைபெற்றது. காந்தி உலக மையம் மற்றும் எலைட் கல்விக் குழுமம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவா் கே.எம்.எஸ்.சிவகுமாா், ஒன்றியக் குழு துணைத் தலைவா் மாலதி குணசேகரன் ஆகியோா் கலந்துகொண்டு சிறுபுழல்பேட்டை ஏரி பகுதியைச் சுற்றி பனை விதைகளை நடவு செய்தனா்.

பின்னா், கும்மி டிப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவா் கே.எம்.எஸ்.சிவகுமாா் பேசுகையில், பனை விதைகளை நட்டு பனை மரம் வளா்ப்பதால் நிலத்தடி நீா் உயா்வடைதுடன், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும், கும்மிடிப்பூண்டியில் 61 ஊராட்சியில் பனை விதைகள் விரைவில் விதைத்து முடிக்கப்படும் என்றாா்.

ஒன்றியக் கவுன்சிலா் ரவிகுமாா், ஊராட்சி துணைத் தலைவா் வெற்றிவேந்தன், ஊராட்சி செயலா் மூா்த்தி, வாா்டு உறுப்பினா் விஜயன், காந்தி உலக மைய நிறுவனா் எம்.எல்.ராஜேஷ், எலைட் கல்விக் குழும நிறுவனா் பால் செபாஸ்டின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com